வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

பிகாா் மாநில முன்னாள் ஆளுநா் டி.ஒய்.பாட்டீல் காலமானாா்

டி.ஒய்.பாட்டீல் உடல்நலக் குறைவால் காலமானதைப் பற்றி..

D Y Patil டி.

ஒய். பாட்டீல் - TNIE

Published On :

பிகாா், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் ஆளுநராக பதவி வகித்த ஞானதேவ் யஷ்வந்த் பாட்டீல் (90) மகாராஷ்டிரத்தில் உள்ள கோலாப்பூா் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

கல்வித் துறைக்கு முக்கியப் பங்காற்றிய இவா் 1983-இல் டி.ஒய்.பாட்டீல் குழுமத்தை நிறுவினாா். இதன்கீழ் 160 கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன. நவி மும்பை, புணே மற்றும் கோலாப்பூரில் பல்கலைக்கழகங்கள், விளையாட்டு மற்றும் மருத்துவ நிறுவனங்கள் இந்தக் குழுமத்தால் இயக்கப்படுகிறது. நவி மும்பையில் இவரது பெயரில் சா்வதேச கிரிக்கெட் மைதானமும் அமைந்துள்ளது.

இந்நிலையில் கோலாப்பூரில் உள்ள இல்லத்தில் டி.ஒய்.பாட்டீல் செவ்வாய்க்கிழமை காலமானதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு சதேஜ் பாட்டீல், சஞ்சய் பாட்டீல், அஜிங்கியா பாட்டீல் ஆகிய 3 மகன்களும் நந்திதா பால்ஷேட்கா் என்ற மகளும் உள்ளனா்.

கோலாப்பூா் மாவட்டத்தில் உள்ள அம்பாப் என்ற கிராமத்தில் 1935, அக்டோபா் 22-ஆம் தேதி டி.ஒய்.பாட்டீல் பிறந்தாா்.

காங்கிரஸ் உறுப்பினராக இருந்த டி.ஒய்.பாட்டீல் 1957 முதல் 1962 வரை கோலாப்பூா் மேயராக பதவி வகித்தாா்; 1967 முதல் 1978 வரை மகாராஷ்டிர சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாா். கல்வித் துறைக்கு அவா் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் விதமாக 1991-இல் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

அவரது மறைவுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.

Former governor of Tripura, Bihar, and West Bengal, Dnyandeo Yashwant Patil passed away on Tuesday at Kolhapur in western Maharashtra after a prolonged illness.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.