நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

இந்தியா - சீனா எல்லை வர்த்தகத்திற்காக நாது லா கணவாய் இன்று திறப்பு!

இந்தியா - சீனா இடையே எல்லை வர்த்தகம் மேற்கொள்ள 6 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட நாது லா கணவாய் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 9:07 pm IST

இந்தியா - சீனா இடையே எல்லை வர்த்தகம் மேற்கொள்ள, 6 ஆண்டுகளுக்கு முன் கோவிட் பெருந்தொற்று காலத்தில் மூடப்பட்ட நாது லா கணவாய் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நாதுலா எல்லை வர்த்தகப் பாதை இந்தியா - சீனா இடையேயான நீண்டகால வர்த்தக உறவின் முக்கிய அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தப் பாதை மீண்டும் திறக்கப்பட்டது எல்லை தாண்டிய வர்த்தகத்தை ஊக்குவித்து, உள்ளூர் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி, பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, இந்தியா - சீனா இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக உறவை வலுப்படுத்தவும் இது உதவும் என்று கூறப்படுகிறது.

நாது லா கணவாய் திறக்கப்பட்ட நிகழ்வில், சிக்கிம் மாநில வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஷெரிங் டி. பூட்டியா கலந்துகொண்டார். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் எனக் குறிப்பிட்ட அவர், பிரதமர் மோடி மற்றும் சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் முயற்சிகளால் எல்லை வர்த்தகம் மீண்டும் சாத்தியமானதாகத் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், சிக்கிமின் பொருளாதாரம் மேம்படுத்தப்படும் என்றும் வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கும் இது ஆதரவாக இருக்கும் என்றும் பூட்டியா தெரிவித்தார்.

நாது லா கணவாய் பகுதியில் வர்த்தகம் செய்யக்கூடிய சுமார் 35 வகையான பொருட்கள் பட்டியலில் உள்ளன. இந்தப் பட்டியலை விரிவுபடுத்துமாறு, இந்திய அரசின் வர்த்தக இயக்குநரகத்திற்கு சிக்கிம் அரசு ஒரு முன்மொழிவை அனுப்பியுள்ளதாக பூட்டியா குறிப்பிட்டார். மேலும், “பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்கள் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதன்மூலம், சிக்கிமின் சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு கணிசமாக அதிகரிக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

நாது லா எல்லைப் பகுதி வர்த்தகத்தின் கீழ், கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருள்கள், பாரம்பரிய மதச் சின்னங்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட பொருள்களை தற்போது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய முடியும்.

இந்த ஆண்டில், எல்லை தாண்டிய வர்த்தகம் மேற்கொள்ள பதிவு செய்த 38 வர்த்தகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள விதிமுறைகளின்படி, நாதுலா வழியாக திங்கள் முதல் வியாழன் வரை எல்லை வர்த்தகம் நடைபெறும். இது நவம்பர் மாதம் வரை தொடரும்.

Summary

Nathu La Pass opens today for India-China border trade!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.