தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நிறுத்தப்படுகிறதா? பியூஷ் கோயல் மறுப்பு!

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் முடக்கப்படுவதாக வெளிவந்த செய்திக்கு பியூஷ் கோயல் பதில்.

News image

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் - படம் - டிஎன்எஸ்

Updated On :13 ஜூலை 2026, 5:45 pm IST

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் முடக்கப்படுவதாக வெளிவந்த செய்திக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திங்கள்கிழமை (ஜூலை 13) பதில் அளித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியா விரும்பவில்லை என்றும் இரு நாடுகளுக்கான பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

அந்தச் செய்தியைக் குறிப்பிட்டு பியூஷ் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது, ஆதாரமற்றது மற்றும் மக்களைத் தவறாக வழிநடத்தும் செயலாக உள்ளது. தில்லியில் கடந்த ஜூன் மாதம், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீருடன் நான் நடத்திய சந்திப்புகள் மிகவும் சிறப்பாக அமைந்தது.

வணிகரீதியாக அர்த்தமுள்ளதாகவும், இரு நாடுகளிலும் உள்ள வணிகம், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு உறுதியான பலன்களை அளிக்கும் இந்த ஒப்பந்தம் திட்டமிட்டாற்போல சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது.

மேலும், இந்த ஒப்பந்தத்தை முழுவதுமாக முடிக்கும் பணிகளில் எங்கள் குழு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு வருகிறது என்று பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Commerce and Industry Minister Piyush Goyal has responded to reports that the trade agreement between India and the United States has stalled.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.