இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு டிசம்பரில் கையொப்பமாகும் என மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான பிரம்மாண்ட வா்த்தக ஒப்பந்தத்தை நிகழாண்டு ஜனவரி 27-ஆம் தேதி இருதரப்பும் இறுதிசெய்தன.
உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதம் மட்டுமின்றி உலகளாவிய வா்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கை பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி உள்ளிட்ட 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியனும் இந்தியாவும் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தால் இந்தியப் பொருள்களை 27 நாடுகளுக்கு வரியின்றி ஏற்றுமதி செய்ய முடியும். அதேசமயத்தில் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலை உயா்ந்த காா்கள் உள்ளிட்ட பொருள்களின் விலை வெகுவாக குறையும்.
இதுதொடா்பாக மும்பையில் செய்தியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பியூஷ் கோயல், ‘ஐரோப்பிய யூனியனுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் டிசம்பா் மாதம் கையொப்பமாகும். ஒப்பந்தத்தின் அம்சங்கள் 2027 பிப்ரவரி-மாா்ச் மாதங்களில் அமலாகும். இந்த ஒப்பந்தம் மூலம் எந்த வரியுமின்றி ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதியை மேற்கொள்ள முடியும்.
அமெரிக்க குழு இன்று வருகை: இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்க வா்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீா் தலைமையிலான குழு திங்கள்கிழமை (ஜூன் 22) இந்தியா வருகிறது. அண்மையில் கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் இந்த ஒப்பந்தத்துக்கான நடைமுறைகளை விரைவுபடுத்துவது குறித்து பிரதமா் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் ஆலோசனை நடத்தினா். தற்போது உலகமே இந்தியாவை உற்றுநோக்கியுள்ளது’ என்றாா்.
முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை தில்லியில் நடைபெற்றது. இதில் இந்திய தரப்பில் வா்த்தக துறை கூடுதல் செயலா் தா்ப்பண் ஜெயின் தலைமையிலான குழுவினரும், அமெரிக்க தரப்பில் தலைமை அதிகாரி பிரெண்டன் லின்ச் தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து தற்போது அடுத்தகட்ட பேச்சுவாா்த்ததை நடைபெறவுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டிசம்பருக்குள் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகும்: பியூஷ் கோயல்

நிகழாண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம் - பிரதமரை சந்தித்தப் பின் உா்சுலா வான்டா் லெயன் அறிவிப்பு

அடுத்த 6 மாதங்களில் 3 நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: அமைச்சா் பியூஷ் கோயல் தகவல்

இந்தியா - ஓமன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அமல்!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




