விரைவில் இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் புதன்கிழமை (ஜுன் 17) தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்லோவாக்கியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒரு வார கால அரசுமுறைப் பயணத்தை சனிக்கிழமை (ஜூன் 13) தொடங்கினார்.
அதன்படி, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோரை பிரதமர் மோடி இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து உர்சுலா வான் டெர் லேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மீண்டும் இவ்வளவு விரைவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. நமது இரு நாடுகளுக்கிடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் வேகமாகச் செயல்பட்டு வருகிறோம்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம். இது தொடர்பான பணிகளை துரிதப்படுத்துவோம். அத்துடன், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடமான IMEC- ஐ மேம்படுத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Dear @narendramodi, it is a pleasure to meet again so soon.
— Ursula von der Leyen (@vonderleyen) June 17, 2026
Since we have concluded the mother of all trade deals, we have been moving fast to deliver on our commitments.
We will sign the Free Trade Agreement by the end of the year.
And accelerate work on an investment⦠pic.twitter.com/JXCDoVazDx
Summary
European Union Commission President Ursula von der Leyen stated on Wednesday (June 17) that a free trade agreement with India would be signed soon.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா-இஸ்ரேல் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நிறுத்தப்படுகிறதா? பியூஷ் கோயல் மறுப்பு!

ஐரோப்பிய விதிமுறைகளால் பாதிக்கப்படும் ஆப்பிள் பென்சில்!
இந்தியா - நியூஸிலாந்து இடையேயான வர்த்தக ஒப்பந்தம் ஒரு வரலாற்று மைல்கல்: பிரதமர் மோடி
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




