தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

ஐரோப்பிய விதிமுறைகளால் பாதிக்கப்படும் ஆப்பிள் பென்சில்!

ஐரோப்பிய ஒழுங்குமுறை விதிகளால் ஆப்பிள் நிறுவனம் மேற்கொண்ட மாற்றம் குறித்து...

News image

ஆப்பிள் பென்சில் - படம் / நன்றி - ஆப்பிள்

Updated On :13 ஜூலை 2026, 4:04 pm IST

ஐரோப்பிய ஒழுங்குமுறை விதிகளால் ஆப்பிள் நிறுவனத்தின் பென்சில், மறு வடிவமைப்புக்குட்படுத்தப்படுகிறது.

ஐபேட் உடன் வழங்கப்படும் ஆப்பிள் பென்சிலில் ஒழுங்குமுறைத் தேவைகளுக்குட்பட்டு புதுமைகள் புகுத்தப்படுவதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் எம்6 ஐபேட் ப்ரோ 2027 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதனுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஆப்பிள் பென்சிலும் அறிமுகமாகிறது.

சமீபத்தில் பென்சில் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளபோதும், அதில் உள்ளூற சில மாற்றங்களை ஆப்பிள் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.

ஐரோப்பிய ஒழுங்குமுறை விதிகளுக்குட்பட்டு இந்த மாற்றங்களை ஆப்பிள் நிறுவனம் செய்யவுள்ளது. அதாவது, அடிக்கடி பழுதுபார்க்கக்கூடிய வடிவமைப்புகளைக் கொண்டதாக பேட்டரிகள் இருக்க வேண்டும். அதிக பழுதுபார்க்கும் நிலையங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் விதிகளை வகுத்துள்ளது.

இவை மடிக்கணினி, ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ் என அனைத்து வகையான மின்னணு பொருள்களுக்கும் பொருந்தும். இந்த விதிகளுக்குட்பட்டு ஐபேட் பென்சிலில் மாற்றங்களை செய்ய ஆப்பிள் முடிவு செய்துள்ளது.

இதன்படி இரு பென்சில்களை ஆப்பிள் தயாரித்து வருகிறது. இவை 2027 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Apple Pencil affected by European regulations Apple could launch revamped Pencil lineup

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.