ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உருகும் சாலை, சிக்னல்! ஐரோப்பிய வெப்ப அலை முழு ஒத்திகை - உலக சுகாதார நிறுவனம்

கடும் வெப்பத்தால், உருகும் சாலைகள், சிக்னல்கள் போன்றவை ஐரோப்பிய வெப்ப அலைக்கான முழு ஒத்திகை என உலக சுகாதார நிறுவனம் தகவல்.

WHO

உலக சுகாதார நிறுவனம் - file photo

Published On :1 ஜூலை 2026, 3:44 pm IST

ஐரோப்பிய நாடுகளில் கடுமையான வெப்பம் பதிவாகி சாலைகளில் தார்கள் உருகி ஓடும் நிலை ஏற்பட்டிருப்பது, முழு ஒத்திகை என்று உலக சகாதார நிறுவனம் வர்ணித்துள்ளது.

அதாவது, ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவரும் கடுமையான வெப்ப அலையானது, வருங்காலத்தில் ஏற்படவிருக்கும் மிகக் கொடுமையான வெப்ப அலைக்கு எல்லாம் முழு ஒத்திகை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கை அறிக்கை, மக்களுக்கு அச்சமூட்டுவதாக உள்ளது. உலக வெப்பமயமாக்கல் நடவடிக்கையின் சராசரியைக் காட்டிலும் ஐரோப்பிய நாடுகள் இரண்டு மடங்கு அதிகமாக வெப்பமடைந்து வருகின்றன.

வெப்ப அலைகள் இனி அரிதாக நிகழும் விசித்திரமான நிகழ்வுகளாக இருக்கப்போவதில்லை என்று அது கூறியிருக்கிறது.

மேலும், நாடு முழுவதும் இதுபோன்ற வெப்ப அலைகளை எதிர்கொள்ள அரசுகளும் தயாராக வேண்டும், ஒவ்வொரு கோடைக்காலத்தின்போதும், வெப்ப அலைகளுக்கு ஏற்ப தயாராகத் தவறிவிடுகிறோம். அதனால் ஏராளமான இன்னுயிர்களை இழக்கிறோம் என்றும் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Summary

Melting roads signals European heatwave dress rehearsal WHO

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.