கான்ஃபரன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் கிறிஸ்டல் பேலஸ் அணி 1-0 என ராயோ வலேக்கானோ அணியை வீழ்த்தி முதல்முறையாகக் கோப்பையை வென்றது.
ஐரோப்பாவில் நடைபெறும் மூன்றாம் தர கால்பந்து போட்டியான கான்ஃபரன்ஸ் லீக் போட்டிகள் கடந்த 2021 முதல் நடைபெறு வருகின்றன. இது சாம்பியன்ஸ் லீக் (முதல் தரம்), ஐரோப்பா லீக் (இரண்டாம் தரம்) கிற்கு அடுத்த படியாக இருக்கிறது.
இறுதிப் போட்டியில் கிறிஸ்டல் பேலஸ் அணி 50ஆவது நிமிஷத்தில் ஜீன் பிலிப் மடேடா கோல் அடித்து அசத்தினார். முதல்முறையாக இந்தக் கோப்பையை வென்றுள்ள கிறிஸ்டல் பேலஸ் இரண்டாம் தர போட்டியான ஐரோப்பா லீக்கிற்கு முன்னேறியுள்ளது.
ஆஸ்டன் வில்லா அணி ஐரோப்பா லீக்கை வென்றது. சாம்பியன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி - ஆர்செனல் அணிகள் மோதவிருக்கின்றன.
இந்தப் போட்டிக்கு முன்பாக கிறிஸ்டல், ராயோ அணிகளின் ரசிகர்கள் மோதிக்கொண்டார்கள். இதில் இரண்டு காவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த விவாகரத்தில் இரண்டு ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
OLIVER GLASNER DID THE BELLY SLIDE â ï¸ pic.twitter.com/S0tZU2OAks
— Crystal Palace F.C. (@CPFC) May 28, 2026
Summary
Crystal Palace beats Rayo Vallecano 1-0 for Conference League title, club's 1st European trophy
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










