ஐரோப்பிய லீக் இறுதிப் போட்டிக்கு ஆஸ்டன் வில்லா கால்பந்து அணி முன்னேறியுள்ளது. இதுவரை ஐரோப்பிய லீக் கோப்பை வெல்லாத அணியாக இருக்கும் ஆஸ்டன் வில்லா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
ஐரோப்பாவில் நடைபெறும் கால்பந்துத் தொடரில் கான்ஃபரன்ஸ் லீக்கை விட உயர்ந்த நிலையிலும் சாம்பியன்ஸ் லீக்கை விட குறைந்த நிலையிலும் ஐரோப்பிய லீக் இருக்கிறது.
இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து அணியாக ஆஸ்டன் வில்லா இருக்கிறது. இந்த அணி ஐரோப்பிய லீக் அரையிறுதியில் இரண்டாம் கட்ட ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா 4-0 என நொட்டிங்ஹம் ஃபாரஸ்ட்டை வீழ்த்தியது. மொத்தமாக 4-1 கோல்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தப் போட்டியில் ஜான் மெக்கின் 2 கோல்கள் அடித்தார். வாட்கின்ஸ், பியூனிடா தலா 1 கோல் அடித்தார்கள். இந்த வெற்றியின் மூலமாக 1982க்குப் பிறகு பெரிய தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இறுதிப் போட்டியில் ஆஸ்டன் வில்லா அணி ஃபிரிபெர்க் உடன் மே.21ஆம் தேதி மோதுகிறது. பிரீமியர் லீக்கில் ஆஸ்டன் வில்லா அணி ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
Summary
Aston Villa routs Nottingham Forest to reach Europa League final against Freiburg
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










