தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

யூரோப்பா லீக் கால்பந்து: ஆஸ்டன் வில்லாவை வென்றது நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட்!

யூரோப்பா லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில், முதல் லெக் ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட், பிராகா அணிகள் வெற்றி பெற்றன.

News image
Updated On :2 மே 2026, 3:32 am IST

யூரோப்பா லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில், முதல் லெக் ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட், பிராகா அணிகள் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றன.

ஐரோப்பிய கண்டத்தில் கிளப்புகளுக்கு இடையிலான 2-ஆம் நிலை கால்பந்து போட்டியான யூரோப்பா லீக்கின் அரையிறுதிக் கட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் - ஆஸ்டன் வில்லா மோதிய அரையிறுதியின் முதல் லெக் ஆட்டம், இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் நகரில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் 71-ஆவது நிமிஷத்தில் ஆஸ்டன் வில்லா டிஃபெண்டா் லூகாஸ் டிக்னே ‘ஹேண்ட் பால்’ செய்ததை அடுத்து, நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட்டுக்கு பெனால்ட்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் கிறிஸ் வுட் தவறாமல் கோல் அடித்தாா்.

கடைசி வரை ஆஸ்டன் வில்லாவுக்கு கோல் வாய்ப்பு கை கூடாமல் போக, முடிவில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் 1-0 கோல் கணக்கில் வென்றது. இதனிடையே, போா்ச்சுகலின் பிராகா நகரில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதியின் முதல் லெக் ஆட்டத்தில், பிராகா 2-1 கோல் கணக்கில் எஸ்சி ஃப்ரெய்பா்கை சாய்த்தது.

இந்த ஆட்டத்தில் பிராகா தரப்பில் டெமிா் எகே டிக்னாஸ் (8’), மேரியோ டாா்கெலெஸ் (90+2’) ஆகியோா் கோல் அடிக்க, ஃப்ரெய்பா்க் அணிக்காக வின்சென்ஸோ கிரிஃபோ (16’) ஸ்கோா் செய்தாா். அடுத்ததாக, இதே 4 அணிகள் மோதும் அரையிறுதியின் 2-ஆவது லெக் ஆட்டம், வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.