சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

உங்கள் பேச்சு எப்படி? ஜாதகம் சொல்லும் ரகசியம்!

ஒருவரின் பேச்சை நிர்ணயிக்கும் கிரகங்கள் பற்றி..

News image

ஜோதிடம் - DPS

Updated On :4 ஆகஸ்ட் 2026, 4:39 pm IST

ஜோதிடத்தில் வெளிப்படையான பேச்சும் மறைமுகமான பேச்சும் ஒருவரின் பேச்சு அழகாகவும், தெளிவாகவும், நிதானமாகவும் இருந்தால், அவர் பேசுவதை இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு இயல்பாகவே ஏற்படும். ஆனால், அனைவரின் பேச்சும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

சிலர் மனதில் இருப்பதை யார் என்ன நினைப்பார்கள் என்ற கவலையின்றி வெளிப்படையாகச் சொல்லிவிடுவார்கள். சிலரால் தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் எளிதில் வெளிப்படுத்த முடியாது. ஒருவரின் பேச்சு நடை, கருத்தை வெளிப்படுத்தும் விதம், வெளிப்படையாகப் பேசும் குணம் அல்லது பேசத் தயங்கும் தன்மை ஆகியவற்றை அவரவர் ஜாதக அமைப்புகள் பிரதிபலிக்கின்றன. வெளிப்படையாகப் பேசுபவர்கள் யார்? மனதில் இருப்பதை வெளிப்படுத்த முடியாதவர்கள் யார்? பேச்சுத் திறன் குறைவாக இருப்பவர்கள் யார்? என்பதை ஜோதிடச் சூட்சுமங்களின் அடிப்படையில் பார்ப்போம்.

கிரகங்களில் அறிவுக்கும் பேச்சுத் திறனுக்கும் காரகனாக புதன் கருதப்படுகிறார். புதன் பலமாக இருந்தால் ஒருவர் புத்திசாலியாகவும், தெளிவாகவும், தயக்கமின்றிப் பேசுபவராகவும் இருப்பார். ஆனால் மற்ற கிரகங்களின் சேர்க்கை, பார்வை மற்றும் ஜாதகத்தின் ஒட்டுமொத்த அமைப்பைப் பொறுத்து இந்தப் பலன் மாறுபடும். மனம் மற்றும் எண்ணங்களின் காரகனான சந்திரனுக்கு திரிகோணத்தில் புதன் அமைந்து, சந்திரன் - புதன் தொடர்பு பெற்று, மேலும் சுபகிரகமான குரு தனது விசேஷப் பார்வையால் இவர்களைப் பார்த்தால், மனதில் உள்ளதை மறைக்காமல், கள்ளங்கபடமின்றி வெள்ளந்தியாகப் பேசும் குணம் உருவாகும்.

இதில் புதன் வர்கோத்தமம் அல்லது புஷ்கராம்சத்தில் இருந்தால், வெளிப்படையாகப் பேசும் தன்மை மேலும் அதிகரிக்கும். குருவின் பார்வை பேச்சில் நேர்மை, நற்பண்பு, நல்லெண்ணம் மற்றும் நம்பகத்தன்மையை வளர்க்கும். அதேபோல், வாக்கு ஸ்தானமான 2ம் பாவத்தின் அதிபதியும், தைரிய ஸ்தானமான 3ம் பாவத்தின் அதிபதியும் பலமாக இருந்தால், மனதில் உள்ளதை அச்சமின்றி வெளிப்படுத்தும் குணம் காணப்படும். வெள்ளந்தியாக இருப்பது பலவீனம் அல்ல; அது இயல்பான குணம். ஆனால் எப்போது, யாரிடம், எப்படிப் பேச வேண்டும் என்ற விவேகம் சேர்ந்தால்தான் அந்த நேர்மைக்கு முழுமையான மதிப்பு கிடைக்கும்.

முக்கியமாக செவ்வாய் புதனுடன் சேர்க்கை பெற்றாலோ அல்லது செவ்வாய் அல்லது சூரியன் புதனுக்கு திரிகோணத் தொடர்பு பெற்றாலோ, மனதில் உள்ளதை மறைக்காமல் நேரடியாகவும் தைரியமாகவும் பேசும் குணம் ஏற்படும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக சுவாமி விவேகானந்தரின் ஜாதகத்தைக் கூறலாம். தனுசு லக்னத்தில் பிறந்த அவருக்கு, 9ம் அதிபதியான சூரியன் லக்னத்தில் அமைந்துள்ளார். ஐந்தாம் பாவத்தில் இருக்கும் செவ்வாய் குருவின் விசேஷப் பார்வையைப் பெற்றுள்ளார். மேலும், 2ம் பாவமான வாக்கு ஸ்தானத்தில் புதனும் சுக்கிரனும் அமைந்திருந்ததால், அபாரமான சொல்வன்மை, இனிமையான பேச்சு மற்றும் அறிவார்ந்த வெளிப்பாடு அவருக்குக் கிடைத்தது. தர்ம திரிகோண பாவங்களின் வலுவான தொடர்பும், குருவின் அருள்பார்வையும் இணைந்ததால், அவருடைய பேச்சு வெறும் சொல் அழகாக மட்டுமல்லாமல், ஆழ்ந்த ஞானம், தெளிவான சிந்தனை, அசைக்க முடியாத தைரியமமிக்க மனவலிமை மற்றும் ஆன்மிக சக்தி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வெளிப்பாடாக அமைந்தது.

ஒருவரின் லக்னம், 2ம் பாவம் அல்லது 3ம் பாவத்தின் மீது நெருப்பு கிரகங்களான சூரியன், செவ்வாய் ஆகியவற்றின் வலுவான தாக்கம் இருந்தால், அவர் மனதில் இருப்பதை அதிகாரத்துடனும் தயக்கமின்றியும் வெளிப்படையாகச் சொல்வார். குறிப்பாக மனோகாரகனான சந்திரனுக்கு 1, 5, 9ம் இடங்களில் செவ்வாய் அமைந்திருந்தால், உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை அதிகம் யோசிக்காமல் நேரடியாக வெளிப்படுத்தும் குணம் காணப்படும். இதனால் சில நேரங்களில் அவர்களின் பேச்சு பிறரின் மனதைப் புண்படுத்தலாம். ஆனால், அவர்களின் நோக்கம் யாரையும் காயப்படுத்துவது அல்ல; மனதில் இருப்பதை மறைக்காமல் வெளிப்படுத்துவதே அவர்களின் இயல்பாகும். மாறாக, ஜோதிடத்தில் புதன் நட்பு, நயமிக்க நுட்பமான அறிவுக்கான காரகன் உடன் செவ்வாய் தொடர்பு ஏற்பட்டால், பேச்சில் கடுமை, அவசரம் மற்றும் பொறுமையின்மை வெளிப்படலாம். இதன் காரணமாக நண்பர்களுடனான நல்லுறவிலும் சில நேரங்களில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

சந்திரனுக்கு அல்லது ராசிக்கு திரிகோணத்தில் சனி அமைந்திருந்தால், மனதில் உள்ளதை உடனே வெளிப்படுத்தாமல் நன்கு யோசித்துப் பேசும் குணம் உருவாகும். சில நேரங்களில் தங்கள் உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்தாமல் மறைமுகமாகப் பேசும் இயல்பும் காணப்படும். சந்திரன்-சனி சேர்க்கை பல சமயங்களில் புனர்பூ தோஷத்தை ஏற்படுத்தும் அமைப்பாகக் கருதப்படுகிறது. இத்தகைய அமைப்பு உள்ளவர்களின் பேச்சே சில நேரங்களில் அவர்களுக்கே எதிரியாக மாறக்கூடும். அதன் விளைவாக, நடைபெற வேண்டிய காரியங்களில் எதிர்பாராத தடை அல்லது தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

உதாரணமாக, திருமணம் நடைபெற வேண்டிய நேரத்தில் பேச்சுவார்த்தை தொடர்பான பிரச்னைகளால் அது தள்ளிப்போகலாம். மேலும், சனி ஆதிக்கம் அதிகமாக இருக்கும் மகரம், கும்பம் மற்றும் சனி உச்சம் பெறும் துலாம் ராசியினரிடம், பேச்சில் மறைமுக அணுகுமுறை, எச்சரிக்கை உணர்வு மற்றும் சில நேரங்களில் பிடிவாதமும் காணப்படலாம். இருப்பினும், இவை அனைத்தும் மற்ற கிரகங்களின் சேர்க்கை, பார்வை, பாவத் தொடர்புகள் மற்றும் ஜாதகத்தின் மொத்த அமைப்பைப் பொறுத்தே மாறுபடும். இறுதியாக, ஒருவரின் பேச்சைக் கொண்டு மட்டும் அவரின் குணத்தையோ நேர்மையையோ முழுமையாக மதிப்பிட முடியாது.

இரண்டுக்குடையவனும் புதன் இணைந்து ஆறாமிடத்தில் நின்றிருந்தால் மற்றும் மூன்றுக்குடைய லக்கினாதிபதியும் இரண்டுக்குடையவனுடன் இணைந்து கெட்டிருந்தால் அந்த ஜாதகன் வாய்பேச இயலாதவனாக இருப்பான் என்று ஜாதக அலங்காரத்தில் (படல் 493) சொல்லப்படுகிறது.

அது தவிர இரண்டுக்குடையவனோடு புதன் இணைந்து லக்னம் 3, 6ம் இடம் ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றில் பலவீனப்பட்டு நின்றிருந்தால் அந்த ஜாதகன் வாயில்லா ஜீவனாவான். அதுவே இந்த கிரக அமைப்புடன் சேரும் கிரகங்கள் எந்த உறவினரை குறிக்கிறதோ அந்த உறவினர்கள் வாய் பேச முடியாதவர்களாவார். மேற்சொன்ன கிரகங்கள் ஆட்சி உச்சத்துடன் பலம் பெற்று இருந்தால் ஜாதகனுக்கும் மற்றவர்களுக்கும் பேச்சு சிறப்பாகவே இருக்கும். ஒரு உறவினர்களும் ஸ்தானாதிபதி காரகாதிபதியை பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக நான்குக்கு உடையவனோ சந்திரனோ சேர்ந்தால் தாயும், ஒன்பதுக்குடையனும் சூரியனும் சேர்ந்தால் தந்தையும் பேசாமல் ஊமையாக இருப்பார் என்று ஜாதக அலங்காரத்தில் (பாடல் 494) கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிரகத்தின் பாவத்தின் - அந்தந்த காரகர் கொண்டு பேச்சின் தன்மை வெளிப்படும் என்பது ஜோதிட சூட்சுமத்தில் கண்டுகொள்ளலாம்.

ராகுவுடன் புதன் அல்லது வாக்கு ஸ்தானத்திற்கு தொடர்பு இருந்தால், சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேச்சை மாற்றிப் பேசும் தன்மை உருவாகலாம்; சில நேரங்களில் உண்மையைத் திரித்துக் கூறும் குணமும் வெளிப்படலாம். அதே அமைப்பில் கேதுவின் தொடர்பும் இருந்தால், தன் பேச்சினாலேயே தானே சிக்கலில் மாட்டிக்கொள்ளும் நிலையும் ஏற்படலாம். இருப்பினும், ஜோதிடம் ஒரு மனிதரின் இயல்பை மட்டுமே சுட்டிக்காட்டுகிறது; தவறான பேச்சை நியாயப்படுத்துவதில்லை. காலம், இடம், சூழ்நிலை மற்றும் எதிரிலிருப்பவரின் மனநிலையை உணர்ந்து நிதானமாகவும் இனிமையாகவும் பேசுவதே வாழ்க்கையின் மிகப் பெரிய யோகமாகும்.

vaideeshwra2013@gmail.com

தொலைபேசி: 8939115647

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.