காட்சிகளில் சில முகங்கள் பெயர் தெரியாமலேயே மனதில் பதிந்து விடும். யார் அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் என்று ரசிகர்கள் தேடும் அளவுக்கு சிலரது நடிப்பு இருக்கும். அப்படி ஒரு வித்தியாச முகத்துக்குச் சொந்தக்காரர் தான் 'அசுரன்' ஜெகே. இவரது இயற்பெயர் ஜெய்கிருஷ்ணா.
வெற்றிமாறனின் 'அசுரன்' தொடங்கி, 'சாணிக்காயிதம்', 'கேப்டன் மில்லர்', 'லால்சலாம்', 'வா வாத்தியார்', 'கர', 'கருப்பு' , 'ப்ளாஸ்ட்' என்று தொடர்ந்து அண்மையில் வெளிவந்த 'லிங்கம்' இணையத் தொடர் வரை தனது இயல்பான நடிப்பால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளவர் 'அசுரன்' ஜெகே.
இயக்குநர் கனவோடு திரையுலகில் வந்தவர், விஜய் சேதுபதியை வைத்து 'வன்மம்' என்ற படத்தை இயக்கியவர், பிறகு நடிகராகி விட்டார்.
'இயக்குநராக வேண்டும் என்று கனவோடு சென்னை வந்தேன். பல மூத்தவர்களிடம் உதவி இயக்குநராக இருந்தேன். பல சினிமா அலுவலகங்களில் வேலை. 2014 - இல் 'வன்மம்' படம் தொடங்கி இயக்கினேன். படத்துக்கு வரவேற்பு இருந்தும், வசூல் இல்லை.
பின், என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு படத்தை இயக்கிய இயக்குநராக மாறிவிட்டு மீண்டும் யாரிடமும் உதவி இயக்குநராகச் சேரமுடியாது. இப்படி ஒரு இக்கட்டான நிலையில் இருந்தேன். அப்போது எனது வயது ஐம்பதைத் தாண்டி இருந்தது. முடிச்சு போட்டுக் கொண்டே செல்கிற வாழ்க்கை அதை அவிழ்ப்பதற்கான வழிகளையும் வைத்திருக்கும். இப்படித்தான் எனது வாழ்க்கையைப் பார்க்கத் தோன்றுகிறது'' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் வைபவ்வின் 30-வது திரைப்படப் பெயர்!

துல்கர் சல்மான் - பூஜா ஹெக்டே படத்தின் பெயர் அறிவிப்பு!

லஞ்சத்தை ஒழிக்க முடியும் என்கிற நம்பிக்கையில்... அரசுக்கு கோரிக்கை வைத்த இயக்குநர் சீனு ராமசாமி!

ராகுல் சதாசிவன் - பிருத்விராஜ் படத்தின் பெயர் அறிவிப்பு!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


