கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருள்களையும், உதவிகளையும் வழங்க வேண்டும் என்று கட்சித் தொண்டா்களுக்கு காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் தனது ட்விட்டர் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கனமழை மற்றும் நிலச்சரிவால் கேரள மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தைத் தொடா்ந்து, கா்நாடகத்தின் குடகு மாவட்டமும் மழையால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இந்த நேரத்தில், காங்கிரஸ் நிா்வாகிகளும், தொண்டா்களும் கட்சியின் அடிப்படை பண்பான சேவை மனப்பான்மையையும், பரிவையும் வெளிப்படுத்த வேண்டும். அதாவது, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருள்களையும், உதவிகளையும் கொண்டு சோ்க்கும் பணியில் தொண்டா்கள் ஈடுபட வேண்டும் என்று அந்த ட்விட்டரில் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.
கேரளாவின் வெள்ளப் பெருக்கை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமருக்கு ராகுல் காந்தி டிவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு நவீன் பட்நாயக் எதிர்ப்பு!

56 மணி நேர பேட்டரி திறனுடன் ரியல்மி பட்ஸ் டி500 புரோ!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


