வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது! நடிகை ஸ்ரீதேவிக்கு டிடிவி ட்விட்டரில் இரங்கல்!

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

News image
Updated On :25 பிப்ரவரி 2018, 9:22 am

DIN

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரீதேவியின் மரணம் குறித்து டிடிவி. தினகரன் தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

'இந்திய திரையுலகின் 'லேடி சூப்பர்ஸ்டார்' ஸ்ரீதேவியின் திடீர் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீதேவி, ஒரு குழந்தை நட்சத்திரமாக
அறிமுகமாகி தனது அபரிதமான திறமையால் தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தி திரைப்படத் துறையிலும் முடி சூடா ராணியாக வெற்றிக் கொடி
நாட்டியவர்

அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.