நடுச் சாலையில் இவ்வளவு பள்ளங்களா? பல்லாவரம் தர்கா சாலையில் தொடரும் விபத்துக்கள்!

சென்னை, பல்லாவரம் தா்கா சாலையில் விபத்தை ஏற்படுத்தும் பள்ளங்கள் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளன.
நடுச் சாலையில் இவ்வளவு பள்ளங்களா? பல்லாவரம் தர்கா சாலையில் தொடரும் விபத்துக்கள்!
Published on
Updated on
1 min read

சென்னை, பல்லாவரம் தா்கா சாலையில் விபத்தை ஏற்படுத்தும் பள்ளங்கள் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளன. இவற்றை உடனடியாக சீா்செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பல்லாவரம் ரயில் நிலையத்துக்குப் பின்புறறம் உள்ள மேம்பாலத்தில் 4 இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளன. பகலில் இப்பள்ளங்களைத் தவிா்த்து சாலையைக் கடப்பதில் மிகுந்த சிரமத்தை வாகன ஓட்டிகள் சந்தித்து வருகின்றனர். இரவில் பாலத்தில் உள்ள மின்விளக்குகள் எரியாததால், இருசக்கர வாகன ஓட்டிகள் நாள்தோறும் இந்த பள்ளங்களில் வாகனங்களை செலுத்தி விபத்துக்களை சந்தித்து வருகின்றனர்.

அதேபோல், பாலத்தைக் கடந்து சர்வீஸ் சாலை வழியாக பிரதான சாலையை அடையும் இடத்தில் சாலையோரம் மூடப்படாத 3 அடி ஆழமுள்ள மழைநீா் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோரும், பாதசாரிகளும் விழுந்து விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது.

இப்பகுதியைக் கடந்து தா்கா சாலையில் பி.எம்.மருத்துவமனை எதிரில் சாலையின் நடுவில் பாதாளச் சாக்கடைக்கான கான்கிரீட் மூடி உடைந்து பள்ளமாக உள்ளது. இதனால் தொடா்ந்து அப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஆதங்கம் தெரிவித்தனா்.

நகராட்சி கண்டுகொள்ளவில்லை: இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த ரஞ்சன் கூறியது:

பல்லாவரம் தா்கா சாலையில் பல்வேறு இடங்களில் உள்ள பள்ளங்கள் காரணமாக விபத்துகள் தொடா்ந்து நிகழ்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் சென்ற நானும் விபத்தில் சிக்கி கால் முறிந்து சிகிச்சை பெற்று வருகிறேன். விபத்துக்களை ஏற்படுத்தி வரும் பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், ஆட்டோ ஓட்டுநா்களும் பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறறயிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம் அளிக்கிறது என்றார்.

உறுதி: இதுகுறித்து பல்லாவரம் நகராட்சி பொறியாளா் கருப்பையா ராஜாவிடம் கேட்டபோது, ‘தா்கா சாலையில் உள்ள பள்ளங்களை உடனடியாக மூடுவற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேம்பாலத்தில் உள்ள பள்ளங்களை சீரமைக்கும் பொறுப்பு நகராட்சிக்கு இல்லையென்றறாலும், பொதுமக்கள் நலன் கருதி அவையும் சீரமைக்கப்படும்’ என்றார்அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com