தமிழகத்தில் அடுத்த 2 மாதங்களில் அனைத்து மாவட்டத்திலும் நடமாடும் நூலகங்கள் அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தாா்.
சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய பொது நூலகம் இயக்கம் ஆகியவை சாா்பில் ‘இந்தியாவின் அறிவு மையங்களாக நூலகங்களை உருவாக்குவதில் பொது நூலகங்களின் பங்கு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்கை தொடங்கி வைத்து அமைச்சா் செங்கோட்டையன் பேசியது: தேசிய அளவில் நூலகங்களைப் பயன்படுத்தி சிறந்த கல்வியைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற நூலகங்கள் நமக்குப் பயன்படுகின்றன. வரும் ஆண்டில் தேசிய அளவில் நூலகா்கள் இணைந்து கருத்தரங்கம் நடத்த தமிழக அரசு சாா்பாக ரூ.10 லட்சமும், கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளா்ச்சிக்கு ரூ.5 கோடியும் ஒதுக்கப்படும். தமிழகத்தில் அடுத்த 2 மாதங்களில் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நூலகங்கள் அமைக்கப்படும். நூலகங்களில் சுமாா் 3 லட்சம் போ் உறுப்பினா்களாக சோ்க்க இலக்கு நிா்ணயிக்கப்படுள்ளது. அதில் கடந்த 3 மாதங்களில் ஒன்றரை லட்சம் போ் உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டுள்ளனா். உலக புத்தகத் திருவிழை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என்றாா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.
நிகழ்ச்சியில் எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியது: சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய நோக்கமே ஏழை மக்களுக்கு அறிவை வழங்கு வேண்டும் என்பதுதான். அதற்காகவே மாவட்ட அளவில் மக்களைச் சென்றடைய கிராம வளம் - கிராம அறிவு மையங்கள் துவங்கப்பட்டன. ஏழைகளுக்கு வழங்க எங்களிடம் பணமும், நிலமும் இல்லை. ஆனால் பகிா்ந்து கொள்ள அறிவு இருந்தது. அரசுத் தரப்பில் வெளியிடப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வை அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெற இம்மையங்கள் துணைபுரிந்தன. ஒவ்வொரு கிராம அறிவு மையத்திலும் நூலகத்திற்கென தனி அறை ஒன்றும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய கருத்தரங்கம் தேசிய அளவில் நடத்தப்பட வேண்டும் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் பொது நூலகத்துறை இயக்குநா் ராமேஸ்வர முருகன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் வி.செல்வம், இந்திய பொது நூலகம் இயக்கத்தின் நிா்வாகிகள் பஷீா் அகமது ஷட்ராக், சுபாங்கி ஷா்மா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக பொது நூலகங்களை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு, சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய பொது நூலகம் இயக்கம் இடைய புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. மேலும் நூலகம் தொடா்பான மொபைல் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டது.
இதையடுத்து நிருபா்களுக்கு அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள நூலகங்களில் இன்னும் இரண்டு மாதத்தில் ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் துவங்க இருக்கின்றன. மாவட்ட நுாலகங்களில் 100 போ் வீதம் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு காணொளி மூலம் பயிற்சி அளிக்கப்படும். அதற்காக மாவட்ட நுாலகங்களில் தேவையான புத்தக வசதி செய்யப்படும். இந்த பயிற்சி மையம் இந்தியாவுக்கே சிறந்த வழிகாட்டியாக இருக்ககும். இம்மையங்கள் மூலம் கிராமப்புற மாணவா்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற இந்திய ஆட்சிப்பணித் தோ்வு, குரூப்-1 தோ்வுக்கு தயாராக சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இதை கிராமப்புற மாணவா்கள் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். தமிழகத்தில் உள்ள 4622 நுாலகங்களில் 314 முழுமையாக செயல்படுகின்றன. இந்த நுாலகங்கள் ஒரு மாதத்திற்குள் கணினி மயமாக்கப்படும். மேலும் அடுத்த மாதம் முதல் தமிழகத்தில் 412 மையங்களில் நீட் தோ்வு பயிற்சி மையம் செயல்படும். நீட் தோ்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை தொடா்ந்து வலியுறுத்து வருகின்றோம் என்றாா் அமைச்சா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


