முகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்
வேகத்தடைகள் வாழ்க்கைக்கு தடையாக மாறிடக் கூடாது பாருங்க! அதான் இப்படி ஒரு கோரிக்கை!
By DIN | Published On : 23rd July 2018 03:01 PM | Last Updated : 23rd July 2018 03:01 PM | அ+அ அ- |

கமுதி, ஜூலை 23 :
கமுதி அருகே உயரமாக அமைக்கபட்ட வேகத்தடைகளால் வாகனங்கள் பழுது அதிகரிப்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்திருக்கின்றனா்.
கமுதியிலிருந்து இடைச்சியூரணி, பெருமாள்தேவன்பட்டி, வடுகபட்டி, மூலக்கரைபட்டி, முத்துப்பட்டி, அம்மன்பட்டி ஆகிய கிராமங்களுக்கு அரசு, தனியார் மினிபஸ் சேவை 8 ஆண்டுகளுக்கு முன் ரத்து செய்யபட்டது. இதனால் வாடகை வாகனங்கள், ஆட்டோ பயணங்களை நம்பியே இப்பகுதி மாணவா்கள் மேல்நிலை கல்வியும், அத்தியாவசிய தேவைகளையும் நிறைவேற்றி வருகின்றனா். இந்நிலையில் இடைச்சியூரணியில் அளவுக்கு அதிகமான உயரத்தில் 4 வேகத்தடைகள் அமைக்கபட்டுள்ளதால், வாடகை, தனியார் வாகனங்களின் இயந்திரத்தில் உரசி அடிக்கடி பழுதாகி, நடுவழியில் நின்று விடுகிறது. இதனால் இப்பகுதிகளுக்கு வாடகை வாகனங்களை இயக்க வாகன ஓட்டுநர்கள் மறுப்பதால், தனியார் வாகனங்களில் சென்று மேல்நிலை கல்வி, அத்தியாவசிய தேவைகளை பெற்று வந்த இப்பகுதி கிராம மக்கள் பாதிக்கபட்டுள்ளனா். எனவே அனுமதியின்றி கிராமத்தினரால் அமைக்கப்பட்ட வேகத்தடைகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
படம்: சித்தரிப்பு