கூத்தாநல்லூர் பகுதியில் 11 வங்கிகள், 12 ஏ.டி.எம்.கள் காலவரம்பின்றி மூடல்: மக்கள் அவதி
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், 11 வங்கிகளும், 12 ஏ.டி.எம்.களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.


கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், 11 வங்கிகளும், 12 ஏ.டி.எம்.களும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதால், இந்தப் பகுதி மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
கூத்தாநல்லூர் வட்டத்தில் மூன்று பேருக்கு கரோனா தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மூன்று பேரும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மத்தியப் பல்கலைக் கழகத்திலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக, கூத்தாநல்லூர் மற்றும் பொதக்குடியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் உள்ள பகுதி முழுவதும், பொதுமக்கள் யாரும் போய்வராதபடி தடுப்புக்கட்டையும் எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், அந்தப் பகுதியில் இயங்கி வந்த வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களையும், மறு உத்தரவு வரும் வரை பூட்டப்படுகின்றன என்ற அறிவிப்பு நோட்டீஸையும் ஒட்டிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பொதக்குடி ஊர் உறவின்முறை ஜமாஅத் நிர்வாக சபை அறப்பணிச் சங்கச் செயலாளர் ரபீயுதீன் கூறியது:
பொதக்குடியில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல், அனைத்து வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களும் மூடப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட ஆட்சியரின் மறு உத்தரவு வரும் வரை காலவரையறையின்றி ழூடப்பட்டுள்ளது எனவும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. ஆனால், முன் அறிவிப்பு இல்லாமல் மூடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கும், வங்கிகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. வங்கிகள் பிரதான சாலையில்தான் உள்ளன. இப்பகுதியில், 3 வங்கிகளும், 3 ஏ.டி.எம்.களும் உள்ளன. மக்கள் பயன்பாட்டிற்காக, ஒரு வங்கி, ஒரு ஏ.டி.எம். எனத் திறக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியரை வலியுறுத்துகிறோம் என்றார்.
இதேபோல், கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாயில் செயலாளர் ஜே.எம்.ஏ. ஷேக் அப்துல் காதர் கூறியது: கூத்தாநல்லூரில் அரசுடைமை மற்றும் தனியார் வங்கிகள் என 8 வங்கிகளும், 9 ஏ.டி.எம்.களும் இயங்கிவருகின்றன. இரண்டு இடங்களில் கரோனா தொற்று நோயால் தனிமைப்படுத்தப்பட்டு, தடுப்புகள் போடப்பட்டுள்ளன. இதனால், இப்பகுதியில் கூத்தாநல்லூர் முழுவதும் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம்களை மறு உத்தரவு வரும் வரை பூட்டப்பட்டுள்ளன. பொதுமக்கள் நலன் கருதி, ஒரு வங்கியும், ஒரு ஏ.டி.எம்.மையும் திறக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...