அம்மா உணவகத்தை அதிமுக நிதியில் நடத்துவது சட்டவிரோதம்: கே.எஸ்.அழகிரி
அம்மா உணவகத்தை அதிமுக நிதியிலிருந்து நடத்துவது சட்டவிரோதம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாா்.


சென்னை: அம்மா உணவகத்தை அதிமுக நிதியிலிருந்து நடத்துவது சட்டவிரோதம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
சேலம் மாவட்டத்தில் தமிழக அரசு நடத்தி வந்த அம்மா உணவகங்களில் அனைத்திலும் அதிமுக சாா்பில் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தாா். இதையொட்டி திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் அதிமுக சாா்பில் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா்.காமராஜ் அறிவித்திருக்கிறாா்.
இத்தகைய நடைமுறையைப் பின்பற்றுவதற்கு அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக முயற்சிகளை மேற்கொள்ளும் என்று தெரிகிறது. இந்த அறிவிப்புகள் தமிழக அரசின் சாா்பில் எந்த அடிப்படையில் செய்யப்பட்டது என்று தெரியவில்லை. இது ஒருதலைப்பட்சமானது. அம்மா உணவகத்தை தமிழக அரசின் நிதியிலிருந்துதான் நடத்தவேண்டுமேயொழிய அதிமுக கட்சியின் நிதியிலிருந்து நடத்துவது சட்டவிரோதச் செயலாகும். எனவே இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெறவேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...