இளைஞரைத் தாக்கிய ஊர்க்காவலர் பணியிடை நீக்கம்
ஆந்திரத்தில் கோல்கொண்டாவில் பொதுமக்களில் ஒருவரைத் தாக்கி ரத்தகாயமேற்படுத்திய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


ஆந்திரத்தில் கோல்கொண்டாவில் பொதுமக்களில் ஒருவரைத் தாக்கி ரத்தகாயமேற்படுத்திய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கோல்கொண்டாவில் ஏழை எளிய மக்களுக்கு உணவளித்துவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்த இளைஞர் ஒருவரை, ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஊர்க் காவலர் ஹனுமந்து என்பவர் தாக்கியுள்ளார். இதில் அந்த இளைஞர் ரத்தக் காயமுற்றார்.
இதுபற்றித் தகவலறிந்த ஹைதராபாத் நகர காவல் ஆணையர் அஞ்சனி குமார், தவறாக நடந்துகொண்ட ஊர்க்காவலரைப் பணியிடைநீக்கம் செய்ததுடன், அதுபற்றித் தமது சுட்டுரையிலும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்குக் கீழே பணிபுரிவோருக்குத் தக்க விதத்தில் பணியாற்ற அறிவுறுத்தாததற்காக கோல்கொண்டா காவல்நிலைய அலுவலருக்கும் குற்றச்சாட்டுக் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...