விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கேரளத்தில் கனமழை: வயநாடு, கோழிக்கூடு மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை

கேரளத்தில் வயநாடு மற்றும் கோழிக்கூடு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
கேரளத்தில் கனமழை: வயநாடு, கோழிக்கூடு மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை
Updated On :6 ஆகஸ்ட் 2020, 6:49 am

DIN

வயநாடு: கேரளத்தில் வயநாடு மற்றும் கோழிக்கூடு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு கடலோர பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கேரளத்தில் வயநாடு, கோழிக்கூடு ஆகிய பகுதிகளில் இன்று மிக அதிக கனமழை பெய்யும். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு மாவட்டங்களுக்கும் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளம் மற்றும் மாஹே பகுதிகளில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.