காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டிச.14-இல் அம்பானி, அதானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம்: சிபிஐ (எம்) 

தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 14-இல் தமிழகத்தில் அதானி, அம்பானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம் நடத்த உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

News image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

Updated On :29 ஜூலை 2021, 7:16 am

DIN

தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 14-இல் தமிழகத்தில் அதானி, அம்பானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம் நடத்த உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டதின் அடுத்தகட்ட நடவடிக்கையாக டிசம்பர் 14 அன்று, தில்லி மாநகரத்தின் அருகமையில் இருக்கும் மாநில விவசாயிகள் டில்லியை நோக்கி புறப்பட வேண்டுமென்றும், அதே தேதியில் இதர மாநிலங்களில் ஆதரவு இயக்கம் நடத்திட வேண்டுமென்றும் விவசாய சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் டிசம்பர் 14ந் தேதியன்று அகில இந்திய விவசாய சங்கத்தின் கூட்டமைப்பின் அறைகூவலின் அடிப்படையில் நாடு முழுவதும் அம்பானி, அதானி பொருட்களை புறக்கணிக்கும் இயக்கம் நடத்தப்பட உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.