விழுப்புரம்: திமுகவினர் மீது தான் அதிக ஊழல் வழக்குகள் உள்ளன என்று புள்ளி விவரங்களுடன் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆவேசமாக கூறினார்.
விழுப்புரத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கூறியதாவது:
திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று ஆளுநரை சந்தித்து ஒரு உத்தேச புகார்ப் பட்டியலை அதிமுக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது கொடுத்துள்ளார்.
இது ஒன்றும் புதிதல்ல, அதிமுக ஆட்சி அமைத்ததிலிருந்து, இதுபோன்ற புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
எவ்வித ஆதாரமும் இல்லாமல் மக்களிடம் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார் ஸ்டாலின்.
குறிப்பாக முதல்வர் மீது குறிப்பிட்டுள்ள புகார்களில், நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விதிமீறி ஒதுக்கியதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஏற்கனவே அவர்கள் புகார் தெரிவித்து, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவராலும் விசாரிக்கப்பட்டு, அவசர அவசரமாக சிபிஐ விசாரணைக்கு உத்தர விட்டார்கள்.
இதில் ஒப்பந்தம் எடுத்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காத நிலையில் ஆதாரமின்றி அரசியலுக்காக புகார் கொடுப்பதை தெரிவித்து, உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
இதுபோலவே அமைச்சர்கள் மீதும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டை திமுகவினர் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் இருக்கும் பல வழக்குகள், புகாரை மீண்டும் ஆளுநரிடம் மனு அளிக்கும் காரணம் என்ன. நாங்கள் வழக்குகளை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று கூறியவர், திமுகவினர் மீது தான் அதிக ஊழல் வழக்குகள் உள்ளன என்று புள்ளி விவரங்களுடன் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


