ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

ஏனாதவாடி கிராமத்தில் ஐம்பெரும் விழா

செய்யாறு அருகே ஏனாதவாடி கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா முன்னிட்டு, 1330 மரக்கன்றுகள் நடுதல், கபசுரகுடிநீர் வழங்குதல், ஆர்சனிக் மாத்திரைகள் வழங்குதல் என ஐம்பெரும்

News image
Updated On :15 ஜூலை 2020, 1:07 pm

DIN

செய்யாறு: செய்யாறு அருகே ஏனாதவாடி கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா முன்னிட்டு, 1330 மரக்கன்றுகள் நடுதல், கபசுரகுடிநீர் வழங்குதல், ஆர்சனிக் மாத்திரைகள் வழங்குதல் என ஐம்பெரும் விழா இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

செய்யாறு வட்டம் ஏனாதவாடி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செய்யாறு கல்வி மாவட்டம் ஜூனியர் ரெட்கிராஸ் சங்கத்தலைவர் ஜி.செல்வத்திருமால் தலைமைத் தாங்கினார். செய்யாறு கல்வி மாவட்ட அலுவலர் செல்வராஜ் 1330 மரக்கன்றுகளை நட்டு வைத்தார். செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எஸ்.சுகாதானந்கம் தோட்டத்தில் வளர்க்கக் கூடிய செடிகளை கிராம மக்களுக்கு வழங்கினார். தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் கிராம மக்களுக்கு கபசுரகுடிநீரும், ஆர்சனிக் மாத்திரைகள் வழங்கப்பட்டன.  மேலும், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சாலை போக்குவரத்து விதிகள் குறித்தும், மதி ஒழிப்பு விழிப்பணர்வு குறித்த விளம்பர நீண்ட சுவரொட்டி அமைக்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் பள்ளி துணை ஆய்வாளர் ஸ்ரீபதி, ஊராட்சி மன்ற தலைவர் எல்லப்பன், கிராம இளைஞர இயக்க நிர்வாகிகள் வினாயகம், சந்தோஷ், சுரேஷ், தொண்டு நிறுவன நிர்வாகிகள் சுந்தர், வீரமணி, மொய்தீன், வட்டாரத் தலைவர் பொற்பாதம், வடிவேலு, சண்முகம், சிவானாந்தம், பி.நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

புகைப்பட விளக்கம்: ஏனாதவாடி கிராமத்தில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.