பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெறும் என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா குறிப்பிட்டார்.
தில்லியிலிருந்தவாறு பிகார் மக்களிடையே இணைய - ஊடகங்களின்வழி நடத்தப்பெற்ற "பொதுக்கூட்டத்தில்" அமித் ஷா உரையாற்றினார். இவ்வாறு ஒரு கூட்டம் நடத்தப்படுவது இதுவே முதல் முறை.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத் தொடக்கத்தைப் போல நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியில்தான் இந்த மாநிலம் காட்டாட்சியிலிருந்து மக்களாட்சிக்கு மாறியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
கரோனா நோய்த் தொற்றால் மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் இக்கட்டான இந்த நேரத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை பாரதிய ஜனதா நடத்துவதாக எதிர்க்கட்சிகள் கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் குறிப்பிட்ட அவர், மோடி ஆட்சியின் ஓராண்டு நிறைவையொட்டித் திட்டமிடப்பட்ட 75 இணையவழிக் கூட்டங்களில் இதுவுமொன்று என்றார்.
கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்களைப் பங்கேற்கச் செய்யவும் தற்சார்பு இந்தியா இயக்கத்தைப் பரப்பவுதுமே கூட்டத்தின் நோக்கம் என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.
14 லட்சம் பேர் பார்த்தனர்
அமித் ஷாவின் இணையவழிக் கூட்டத்தை 14 லட்சம் பேர் பார்த்ததாக பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
யூ டியூபில் 5 லட்சம் பேரும் ட்விட்டரில் 66 ஆயிரம் பேரும் அமித் ஷாவின் பேச்சைக் கேட்டதாக பா.ஜ.க.வின் ஊடகப் பொறுப்பாளர் சஞ்சய் மயூக் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


