ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று படகு மூழ்கி உயிரிழந்த மூன்று மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணத்தை ராமநாதபுரம் எம்.பி, நவாஸ்கனி செவ்வாய்கிழமை வழங்கினார்.
மீன்பிடி தடைகாலம் முடிவடைந்து 13ஆம் தேதி சனிக்கிழமை 750க்கும் மேற்பட்ட விசைப்படகுளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத் துறை மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று மீன்பிடிக்க சென்றனர். சென்ற ஞாயிற்றுகிழமை காலையில் விசைப்படகுகள் கரை திரும்பிய நிலையில் ஹெட்டோ என்பவரது விசைப்படகு மட்டும் கரை திரும்பவில்லை.
அதில் மலர் வண்ணன்(55), ரெஜின்பாஸ்கர்(43), ஆஸ்டின்(19) (என்ற) சுஜிந்திரா, ஜேசு(60) ஆகிய நான்கு மீனவர்கள் கடலுக்குச் சென்றிருந்தனர். அந்த விசைப்படகு காற்றில் சிக்கி, அதனுள் கடல் நீர் புகுந்து நான்கு பேரும் கடலில் மூழ்கினர்.
இதில் ஜேசு என்ற மீனவரை மட்டும் மீனவர்கள் மீட்டனர். மீதமுள்ள மூன்று மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், கடலில் மூழ்கி உயிரிழந்த மூன்று மீனவர்களின் குடும்பத்தினரை ராமநாதபுரம் எம்,பி. நவாஸ்கனி நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணமும் வழங்கினர்.
இதில் ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்ஷா, முத்து ராமலிங்கம், மண்டபம் ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், ராமேசுவரம் நகர் செயலாளர் நாசர்கான், இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி மாநில பொருளாளர் ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி
பள்ளிச்சட்டம்பி படத்துக்கு பெருகும் வரவேற்பு! 2 நாளில் வெற்றியை அறிவித்த படக்குழு!
தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்படும்: ப. சிதம்பரம்

ராகுல் பேசுவதைக் கேட்பதே தலைவலியாக இருந்தது! கங்கனா ரணாவத்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


