கரோனா தொற்றில்லா மாவட்டமானது நாமக்கல்: ஒரே நாளில் 15 பேர் குணமடைந்தனர்
நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 பேர் புதன்கிழமை குணமடைந்து வீடு திரும்பினர்.


நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 பேர் புதன்கிழமை குணமடைந்து வீடு திரும்பினர்.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 77 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சேலம், கரூர் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.
14 நாள்கள் தங்கியிருந்த நிலையில் இரு முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதியானதன் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அனுப்பப்பட்டு வந்தனர். அதன்படி, செவ்வாய்க்கிழமை வரையில் கரூர், சேலம் அரசு மருத்துவமனையில் தங்கியிருந்த 62 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.
இந்த நிலையில், புதன்கிழமை பிற்பகல் 4 மணியளவில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து 15 பேர் சிறப்பு வாகனத்தில் அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
இதன்மூலம் நாமக்கல் மாவட்டம் தற்போது கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் கூறியது: தொற்று இல்லாத மாவட்டமாக நாமக்கல் மாறியுள்ளது. இன்னும் 14 நாள்களுக்கு எவ்வித தொற்றும் இல்லாதபட்சத்தில் நாமக்கல் மாவட்டம், சிகப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக மாறுதல் பெறும். பச்சை மண்டலமாக மாறுவதற்கு அதிக நாள்களாகும். அதுவரையில் யாருக்கும் தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...