கரோனா பொது முடக்கம் நடைமுறையிலுள்ள காலத்தில், மே மாதம் முதல் தேதியிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் இதுவரை 21 குழந்தைகள் பிறந்திருக்கின்றனர்.
குஜராத்தில் ஜாம்நகரில் நிறைமாத கர்ப்பிணியாக ரயிலேறிய மமதா, பிகாரில் சப்ரா ரயில் நிலையத்தில் இறங்கும்போது கையில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தையுடன் இறங்கினார்.
ரயில் பெட்டியே மகப்பேறு அறையாக மாற்றப்பட்டுக் குழந்தையும் பெற்றெடுத்தார் மமதா. இந்த தாய் மற்றும் குழந்தைக்கான மருத்துவ கவனிப்புக்காக, இடைநில்லா இந்த சிறப்பு ரயில், ஆக்ரா கோட்டை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
பின்னர், அதே ரயிலிலேயே மமதா அவருடைய ஊரைச் சென்றடைந்தார்.
மே முதல் நாளிலிருந்து இந்தச் சிறப்பு ரயில்களில் சுமார் 21 குழந்தைகள் பிறந்திருப்பதாக ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.
கெடுவினையாக வெவ்வேறு ரயில்களில் இரு குழந்தைகள் மட்டும் இறந்தே பிறந்தன, மற்றொரு பெண் குழந்தை பிறந்த இரண்டு மணி நேரத்தில் இறந்துவிட்டது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நினைவுகளுக்கு ஒளிகொடுப்பதே கொண்டாட்டங்களின் அர்த்தம்: ஷ்ருதி ராமச்சந்திரன்

Perumal mani interview | விஜய் அரசின் தனித்தீர்மானங்களால் என்ன பயன் ? | CM Vijay | TVK | TN Assembly

ரயிலில் சூட்கேஸில் ஆண் சடலம்: கொலையாளிகளின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

இ20 விவகாரத்தில் முரண்பட்ட கருத்துகள்: மத்திய அரசைச் சாடும் அகிலேஷ்!
விடியோக்கள்

Perumal mani interview | விஜய் அரசின் தனித்தீர்மானங்களால் என்ன பயன் ? | CM Vijay | TVK | TN Assembly



