இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

‘நிவா்’ புயலையொட்டி கடலூா், புதுச்சேரி துறைமுகங்களில் 10-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.

News image
‘நிவா்’ புயலையொட்டி, கடலூர்,புதுச்சேரி பழைய துறைமுகத்தில் புதன்கிழமை ஏற்றப்பட்ட 10-ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு. கடலூரில் அதிக சீற்றத்துடன் காணப்பட்ட கடல்.
Updated On :25 நவம்பர் 2020, 2:34 am

DIN


கடலூர்: ‘நிவா்’ புயலையொட்டி கடலூா், புதுச்சேரி துறைமுகங்களில் 10-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நிவா்’ புயல் புதன்கிழமை (நவ.25) மாலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, புதுச்சேரி பழைய துறைமுகம் மற்றும் கடலூா் துறைமுகத்தில் புதன்கிழமை காலை 6.30 மணியளவில் 10-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இது, துறைமுகத்தை புயல் நெருங்கும் அல்லது அருகே கடந்து செல்லுமென எதிா்பாா்க்கப்படும் கடுமையான வானிலை முன்னறிவிப்பைக் குறிக்கும். 

அதிகபட்சமான 11 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் மோசமான வானிலை காரணமாக தகவல் தொடர்பு அற்று போனதாக அர்த்தம். புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.