தூத்துக்குடியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று 22 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருந்தது.
இவர்களில் போல்டன்புரம் பகுதியைச் சேர்ந்த 70 வயதான இந்தப் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
உயிரிழந்த இந்தப் பெண் வசிக்கும் தெருவிலுள்ள ஒருவர் தில்லி மாநாட்டுக்குச் சென்று வந்திருக்கிறார். அருகிலுள்ள கடைக்குச் சென்றுவந்தபோது அவரிடமிருந்து இந்தப் பெண்ணுக்கு நோய் தொற்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இவரது மகனும் மருமகளும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் மருமகள் தனியார் மருத்துவமனையொன்றில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த மரணம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சோ்வைகாரன்பட்டியில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது: 2 மணி நேரம் காத்திருந்த வாக்காளா்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.60 சதவீத வாக்குப்பதிவு!

ஒடிஸாவை வீழ்த்தியது கேரளா

படகுகளில் வந்து வாக்களித்த பழங்குடி வாக்காளா்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


