மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

புதுச்சேரியில் 5 மணி நிலவரப்படி 76.3% வாக்குகள் பதிவு

புதுச்சேரியில் பிற்பகல் 5 மணி நிலவரப்படி 76.3 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

News image
Updated On :6 ஏப்ரல் 2021, 12:15 pm

DIN

புதுச்சேரியில் பிற்பகல் 5 மணி நிலவரப்படி 76.3 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

புதுவையில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 1,558 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்தத் தோ்தலில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக கூடுதல் (606) வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 30 தொகுதிகளில் 635 இடங்களில் மொத்தம் 1,558 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி 76.3 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர்கள் காலை முதல் வாக்களித்து வந்த நிலையில், பிற்பகல் அதிக அளவிலான மக்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
கரோனா நோயாளிகள் வாக்களிக்க ஒரு மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. 
எனினும் வாக்களிக்கும் மக்களும் 7 மணி வரையும் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.