ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மேட்டூர் அணை பகுதியில் கருங்கல் வெட்டி கடத்தல்; ஒருவர் கைது: விஏஓ, வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை பாய்கிறது?

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியில் வெடி பொருள்கள் மூலம் கருங்கல் வெட்டி கடத்தல் ஒருவர் கைது. கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என

News image
மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியில் வெடிமருந்துகளை பயன்படுத்தி பாறைகளை உடைத்து கடத்தலுக்கு வசதியாக வெட்டப்பட்டுள்ள கருங்கல்.
Updated On :6 ஆகஸ்ட் 2021, 6:52 am

DIN


சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியில் வெடி பொருள்கள் மூலம் கருங்கல் வெட்டி கடத்தல் ஒருவர் கைது. கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. 
 
மேட்டூர் அருகே கோனூர் மேற்கு கிராமத்தில் உள்ளது திப்பம்பட்டி. இங்கு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் வெடிமருந்துகளை பயன்படுத்தி பாறைகளை உடைத்து வீடுகள் கட்டவும் பிற உபயோகத்திற்காகவும் பல ஆண்டுகளாக விற்கப்பட்டு வந்துள்ளது. 

Story image

பாறைகளை வெடிமருந்துகளை பயன்படுத்தி உடைத்து கடத்தலுக்கு வசதியாக வெட்டப்பட்டுள்ள கருங்கல்.

மேட்டூர் அணை பகுதியிலேயே வெடி வைத்து பாறைகளை உடைத்ததை பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் சிறு சிறு குன்றுகள் காணாமல் போனது. பல கோடி ரூபாய் மதிப்பிலான பாறைகள் கனிமங்கள் சதுர கற்களாக வெட்டி விற்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள் வழியாகவே  இரவு பகலாக கடத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மேட்டூர் சார் ஆட்சியர் வீர்பிரதாப்சிங் அப்பகுதிக்கு ஆய்வு சென்றபோது அதிர்ச்சியடைந்தார். அதன்பிறகு கோனூர் மேற்கு கிராம நிர்வாக அலுவலர் மைதிலி மேட்டூர் வருவாய் ஆய்வாளர் நல்லத்தம்பி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Story image

வெடிமருந்துகளை பயன்படுத்தி வெட்டப்பட்டுள்ள கருங்கல்

மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியில் வெடிமருந்துகளை பயன்படுத்தி பாறைகளை உடைத்து கடத்தலுக்கு வசதியாக வெட்டப்பட்டுள்ள கருங்கல்.

விசாரணை நடந்து வரும் நிலையில், வருவாய் ஆய்வாளர் நல்லத்தம்பி கருமலைக்கூடல் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் திப்பம்பட்டி காட்டுவளவை சேர்ந்த பூவேந்திரன் என்கிற பூபதியை கருமலைக்கூடல் போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்து மேட்டூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி உத்திரவின்பேரில் பூவேந்திரன் ஓமலூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். 

கருங்கல்லை கடத்த பயன்படுத்திய டிப்பர் லாரி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இங்கு கருங்கல் வெட்டி கடத்தப்படுவது பல ஆண்டுகளாக திருடப்பட்டு வருவதாகவும், திருடப்பட்ட கற்களின் மதிப்பு கோடி கணக்கில் இருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Story image

வெடிமருந்துகளை பயன்படுத்தி கடத்தலுக்கு வசதியாக வெட்டப்பட்டுள்ள கருங்கல்.

கோனூர் மேற்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பிறகு இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை பாயும். கருங்கல் கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.