சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திமுக வட்டச்செயலாளர் நள்ளிரவில் குத்தி படுகொலை: இரண்டு பேர் கைது

தூத்துக்குடியில் திமுக வட்டச்செயலாளர் நள்ளிரவில் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image

கொலை செய்யப்பட்ட திமுக வட்டச்செயலாளர் நடராஜன்

Updated On :7 ஆகஸ்ட் 2021, 6:01 am

DIN


தூத்துக்குடியில் திமுக வட்டச்செயலாளர் நள்ளிரவில் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் இவர் 45-ஆவது வட்ட திமுக செயலாளராக உள்ளார். மேலும் ராமசாமிபுரத்தில் சொந்தமாக ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். 

இந்த நிலையில் தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் உள்ள முனியசாமி கோவில் கொடை விழா வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் கலந்துகொண்ட நடராஜன் கோவில் கோடை விழாவில் ஆடிக் கொண்டிருந்த சில இளைஞர்களை கோவிலிலிருந்து வெளியே போக சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் கோவிலில் வைத்து இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இரவு சுமார் 2 மணியளவில் கோவில் கொடை முடிந்ததும் நடராஜன்  ராமசாமிபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு அவரது நண்பர் அருணுடன் சென்று உள்ளார். அப்போது பின்தொடர்ந்து சென்ற அந்த இளைஞர்கள் நடராஜனிடம்  தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நடராஜன் மீது செங்கலை வீசியும் கத்தியால் குத்தி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினர். 

தகவலறிந்த தென்பாகம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். 

மேலும் கொலை தொடர்பாக போலீசார் அருண்குமார், கார்த்திக், என்ற இரு இளைஞர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக சிலரை தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் திமுக வட்டச் செயலாளர் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.