மேற்கு வங்கத்தில் திரையரங்குகளுக்கு அனுமதி
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மேற்குவங்கத்தில் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மேற்குவங்கத்தில் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து மேற்குவங்கத்தில் கடந்த மே 16ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கரோனா எதிரொலி: பாடத்திட்டங்களைக் குறைத்தது தமிழக அரசு
இந்த பொதுமுடக்கமானது தொற்று பரவல் நிலைகளுக்கேற்ப அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த கரோனா பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை மேலும் 15 நாள்களுக்கு நீட்டித்து மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி திரையரங்குகள் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நீச்சல் குளங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகள் 50 சதவிகித பயனாளர்களுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 1,933 பேருக்கு கரோனா தொற்று
இரவு 10.30 மணி வரை மளிகை மற்றும் பலசரக்குக் கடைகள் இயங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...