
ஆம்பூர்: ஆம்பூர் அருகே வீட்டு திண்ணையில் வியாழக்கிழமை இரவு படுத்து தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் தலையின் மீது கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை நடத்தும் கிராமிய போலீஸார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியங்குப்பம் ரசாக் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் சம்பவத்தன்று இரவு வீட்டின் முன்பு திண்ணையில் படுத்து தூங்கியுள்ளார். காலையில் அவரது உறவினர்கள் பார்த்தபோது, தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.
விசாரணை நடத்தும் காவல்துறையினர்
இது குறித்து தகவலின் பேரில் ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி சிபி சக்கரவர்த்தி நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு கொலையாளியை பிடிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.