சசிகலா உடல்நிலை முன்பை விட தற்போது நல்ல நிலையில் உள்ளதாக அவரது வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு - பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா இன்று (ஜன.27) விடுதலை செய்யப்பட்டார்.
இதையும் படிக்கலாமே: 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா!
இதனிடையே அவரது வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சசிகலா விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது காவல்துறை பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.
சிறையில் இருந்த சசிகலா சிறையில் தோட்டக்கலை தொடர்பான பணிகளை மேற்கொண்டார். அதன்மூலம் கிடைத்த வருவாய் மற்றும் விளைபொருள்கள் சிறைக்கே வழங்கப்பட்டுள்ளது.
உடல் நலம் முழுவதும் சரியான பின்பு விரைவில் தமிழக மக்களை சந்திக்கிறேன் என்று சசிகலா மக்களிடம் தெரிவிக்கச் சொன்னதாகக் கூறினார்.
சசிகலாவிற்கு மீண்டும் 30-ம் தேதி கரோனா பரிசோதனை செய்யப்படும். அதன் பிறகு வீட்டிற்கு அழைத்துச் செல்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று வழக்கறிஞர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தந்தை! | Bangladesh

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


