விண்ணிலிருந்து பூமியைப் பார்த்தது நம்ப முடியாத அனுபவம்: ஸ்ரீஷா

விண்வெளியிலிருந்து பூமியை பார்ப்பது நம்பமுடியாத அனுபவம் என இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை ஸ்ரீஷா பாண்ட்லா தெரிவித்துள்ளார்.
விண்ணிலிருந்து பூமியைப் பார்த்தது நம்ப முடியாத அனுபவம்: ஸ்ரீஷா

விண்வெளியிலிருந்து பூமியை பார்ப்பது நம்பமுடியாத அனுபவம் என இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை ஸ்ரீஷா பாண்ட்லா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சோ்ந்த விண்வெளி நிறுவனம் வா்ஜின் கலாக்டிக். இந்த நிறுவனம் மனிதா்களை ஏற்றிச் செல்லக்கூடிய ‘ஸ்பேஸ்ஷிப்-2 யூனிட்டி’ என்ற விண்வெளி ஓடத்தை ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தியது. 

உலகின் பணக்காரர்களில் ஒருவரான ரிச்சா்ட் பிரான்ஸன் (71), அவரது நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஸ்ரீஷா பாண்ட்லா (34) உள்ளிட்ட 6 போ் அந்த விண்வெளி ஓடத்தில் பயணம் செய்தனர். இவா் ஆந்திர மாநிலம், குண்டூா் மாவட்டத்தில் பிறந்து அமெரிக்காவில் வளா்ந்தவா்.

இந்நிலையில், தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஸ்ரீஷா, விண்வெளியிலிருந்து பூமியை பார்ப்பது என்பது நம்பமுடியாத அனுபவம் என தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் அவர் தெரிவித்ததாவது, "ஆச்சரியத்தில் செய்வதறியாமல் தவிக்கிறேன். ஆனால், இங்கிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

என் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேறு வார்த்தையை தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், நம்பமுடியாதது என்பதுதான் மனதில் தோன்றுகிறது. விண்வெளியிலிருந்து பூமியை பார்ப்பது என்பது வாழ்க்கையையே திருப்பிப்போட்ட சம்பவம். இந்த முழு பயணமும் எனக்கு ஆச்சரித்தை அளிக்கிறது" என்றார்.

கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்கு பிறகு விண்வெளிக்கு சென்ற மூன்றாவது இந்திய வம்சாவளி வீராங்கனை ஸ்ரீஷா என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com