புதுவையில் ஜூலை 16 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: கல்வியமைச்சர்
புதுவையில் ஜூலை 16 முதல் கரோனா விதிகளைப் பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் தொடங்கும்: கல்வியமைச்சர் ஏ. நமச்சிவாயம்


புதுவையில் ஜூலை 16-ம்தேதி முதல் கரோனா விதிகளைப் பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் தொடங்கும் என்று கல்வி அமைச்சர் ஏ. நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம், செவ்வாய்க்கிழமை கட்சி நிர்வாகிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''பாஜக தேசியத் தலைமை உத்தரவின்படி, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் பொதுமக்கள் சார்ந்த கோரிக்கைகளை கேட்டு வருகிறோம்.
கட்சியின் மாணவர் அமைப்பு மற்றும் நிர்வாகிகள் தரப்பில், கல்வித்துறை தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அது தொடர்பாக அதிகாரிகளுடன் விரைந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் 16-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் செயல்படுவதற்கு, அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.
காவலர் தேர்வு நடத்துவது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு விரைவில் தேர்வு நடத்தப்படும். மாணவ அமைப்பினர், தமிழகத்தைப் போல், புதுவையிலும் இணையவழியில் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். அது தொடர்பாகவும் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...