தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புதுச்சேரி: பிரெஞ்சு தேசிய தின விழா

பிரெஞ்சு தேசிய தின விழா புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தும் வகையில் புதன்கிழமை காலை கொண்டாடப்பட்டது. 

News image
பிரெஞ்சு தேசிய தின விழா
Updated On :14 ஜூலை 2021, 5:52 am

DIN

புதுச்சேரி: பிரெஞ்சு தேசிய தின விழா புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தும் வகையில் புதன்கிழமை காலை கொண்டாடப்பட்டது. 

இதனையொட்டி புதுச்சேரி பிரெஞ்ச் துணைத் தூதர் லிசே டல்போட் பரே அவர்களும், புதுச்சேரி துணை மாவட்ட ஆட்சியர் (தலைமையகம்) கே. முரளிதரன் அவர்களும், போர் வீரர் நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளின் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.

புதுச்சேரியில் கரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எளிமையாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.