ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மானாமதுரை மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை வழிபாடு 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தயாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு இரவு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.

News image
மானாமதுரை தயாபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை வழிபாட்டில் பங்கேற்ற பெண்கள்.
Updated On :24 ஜூலை 2021, 3:24 am

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தயாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு இரவு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி மூலவர் முத்துமாரியம்மனுக்கு பலவகை அபிஷேகங்கள் நடத்தி ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Story image

திருவிளக்கு பூஜை வழிபாட்டின் போது சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்த தயாபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன்.

அதன் பின்னர் கோயில் வளாகத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை வழிபாட்டில் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி பூஜைகள் நடத்தினர்.

திருவிளக்கு பூஜை முடிந்ததும் முத்துமாரியம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஆடி முதல் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து முத்துமாரி அம்மனை தரிசனம் செய்தனர்.

திருவிளக்கு பூஜை வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சுப்பிரமணியன் பூசாரி செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.