புதுதில்லி: நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 43,509 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் அதிகபட்சமாக 640 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், கரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது என்று சுகாதார வல்லுநா்கள் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், கரோனா முன்னெச்சரிக்கை விதிகளை முறையாக கடைப்பிடிக்காமல் பலா் செயல்படுவதால் தொற்று அதிகரித்து வருகிறது.
கடந்த சில தினங்களாக குறைந்து வந்த தொற்று பாதிப்பு மீண்டும் தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் வியாழக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 43,509 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,15,28,114 -ஆக உயா்ந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது தினசரி பாதிப்பு விகிதம் 2 சதவிகிதமாக உள்ளது.
38,465 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,07,01,612 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4,03,840-ஆக உள்ளது. கடந்த 51 நாள்களில் 38,465 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த வழக்குகளில் 27 சதவிகதமாக உள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 97.38 சதவிகிதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 640 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,22,662-ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த மே 4-ஆம் தேதி 2 கோடியைக் கடந்த நிலையில், ஜூன் 23-ஆம் தேதி 3 கோடியைக் கடந்தது.
நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 45,07,06,257 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 43,92,997 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 46,26,29,773 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் புதன்கிழமை மட்டும் 17,28,795 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”அந்த வலி எனக்குப் புரியும்! யாரும் Leak-ஆன படத்தை பார்க்க வேண்டாம்!” சுந்தர். சி பேட்டி

போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்!

சோளிங்கரில் 23 வேட்பாளா்கள்

மலையாள திரையுலகில் துஷாரா விஜயன்! காட்டாளன் பட புதிய அப்டேட்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


