மேட்டூரில் ஆடிப்பெருக்கில் மக்கள் கூட தடை விடித்து மேட்டூர் சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேட்டூர் காவிரியில் ஆடிப்பெருக்கில் நீராட 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கூடுவார்கள். அதேபோல் ஆடி அமாவாசை தினத்தில் மூதாதையர்களுக்கு தர்பனம் கொடுக்க ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வார்கள். ஆடி 28-இல் காவிரியில் நீராட மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வார்கள்.
சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக மேட்டூருக்கு வருவார்கள். காவிரியில் நீராடி அணைக்கட்டு முனியப்பனை தரிசித்து மேட்டூர் அணை பூங்காவிற்கு செல்வார்கள்.
தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதாலும் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஆடி 18 தினமான ஆகஸ்ட் 3 ஆம் தேதியும், ஆடி அமாவாசை தினமான ஆகஸ்ட் 8 ஆம் தேதியும் ஆடி 28 நாளான ஆகஸ்ட் 13 ஆம் தேதியும் மேட்டூர் காவிரிப்படுகை, அணைக்கட்டு முனியப்பன் கோவில், மேட்டூர் அணை பூங்கா பகுதிகளில் ஆகஸ்ட் 3, 8 மற்றும் 13 ஆகிய நாள்களில் பொதுமக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
அந்த நாள்களில் வெளியூர் மற்றும் உள்ளூர் மக்கள் வருகை தருவதை தவிர்க்க வேண்டும். இதனை வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்று மேட்டூர் சார் ஆட்சியர் வீர்பிரதாப்சிங் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


