92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சாலை விபத்து: உயிருக்கு போராடும் கன்னட நடிகர்

பெங்களூரு: சாலையில் விபத்துக்குள்ளான கன்னட நடிகரான சஞ்சாரி விஜய், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது சகோதரர் சித்திஸ் குமார் தெரிவித்துள்ளார்.

News image

கன்னட நடிகர் சஞ்சாரி விஜய்

Updated On :13 ஜூன் 2021, 3:30 pm

DIN

பெங்களூரு: பெங்களூரு: சாலையில் விபத்துக்குள்ளான கன்னட நடிகரான சஞ்சாரி விஜய், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது சகோதரர் சித்திஸ் குமார் தெரிவித்துள்ளார்.

தேசிய திரைப்பட விருது பெற்ற கன்னட நடிகரான சஞ்சாரி விஜய், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தீடீரென வாகனத்தில் இருந்து  சறுக்கி விழுந்ததில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், அடுத்த 48 மணி நேரம் அவருக்கு மிகவும் முக்கியமானது என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று நடிகரின் சகோதரர் சித்திஸ் குமார் தெரிவித்தார்.

சஞ்சாரி விஜய் நடித்த 'நானு அவநல்ல அவலு' (நான் அவனல்ல அவள்) திரைப்படத்திற்கு வெகுவாக பாராட்டுக்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.