ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மானாமதுரையில் ரயிலில் அடிபட்டு மெக்கானிக் சாவு 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரயிலில் அடிபட்டு இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் மெக்கானிக் உயிரிழந்தார்.

News image
ரயிலில் அடிபட்டு உயிரிழந்த பைக் மெக்கானிக் சுரேஷ்
Updated On :19 ஜூன் 2021, 5:53 am

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரயிலில் அடிபட்டு இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் மெக்கானிக் உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூரைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் சுரேஷ்(35) இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. தற்போது மானாமதுரை பாண்டியன் நகரில் வசித்து வருகிறார்.

மானாமதுரை பஸ் நிலையம் அருகேயுள்ள இரு சக்கர வாகனம் விற்கும் ஷோரூமில் சுரேஷ் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.  

இரவு பஸ் நிலையம் எதிரே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சுரேஷ் மீது அந்த வழியாக வந்த சிறப்பு ரயில் மோதி உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து மானாமதுரை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.