பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெல்லை அருகே தொழிலாளி வெட்டிக்கொலை

திருநெல்வேலி அருகே புதன்கிழமை அதிகாலை தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :23 ஜூன் 2021, 3:28 am

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே புதன்கிழமை அதிகாலை தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

திருநெல்வேலி அருகே உள்ள கொண்டாநகரம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த அர்ஜுனன் மகன் மாரியப்பன்(32). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு நான்கு சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்.

செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து வந்த மாரியப்பன் வீட்டிலிருந்து நண்பர்களுடன் வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை புதன்கிழமை அதிகாலை தேடியபோது ஒரு கோயில் வளாகம் அருகே அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் மாரியப்பன் சடலமாக கிடந்தார். 

தகவல் அறிந்ததும் சுத்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.