தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சசிகலா ஆயிரம் பேருடன் பேசினாலும் கவலை இல்லை: எடப்பாடி பழனிசாமி

சசிகலா நாள்தோறும் ஆயிரம் பேருடன் பேசினாலும் கவலை இல்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

News image
சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி.
Updated On :30 ஜூன் 2021, 8:31 am

DIN


சசிகலா நாள்தோறும் ஆயிரம் பேருடன் பேசினாலும் கவலை இல்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

சேலம் மாவட்டம், ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது, திமுக தேர்தல் நேரத்தில் 505 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் ஒரு சிலவற்றை மட்டும் நிறைவேற்றுவதாக அறிவித்து உள்ளது. பெட்ரோல் டீசல் விலை குறைப்பதாக அறிவித்து இருந்தனர். ஆனால் விலை குறைப்பு நடைபெறவில்லை. இது பெரும் ஏமாற்றம்.

கட்டுமான பொருட்களின் விலை அதிக அளவில் உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக கட்டுமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து உள்ளனர்.  விலையை கட்டுப்பாட்டில் வைத்திட வேண்டும். சிமென்ட் விலை உயர்ந்து கொண்டே உள்ளது.அதிமுக ஆட்சியில் அம்மா சிமென்ட் கொடுக்கப்பட்டது. இதனை கூடுதலாக வழங்கிட வேண்டும்

தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஒரு மையத்தில் 300 பேருக்கு மட்டுமே செலுத்தப்படுகிறது. இதனால் பல மையங்களில் பதற்றம் நிலவி வருகிறது. பல மணி நேரம் காத்திருந்து தடுப்பூசி செலுத்தாமல் செல்லும் நிலை உருவாகிறது.

நீட் தேர்வு குறித்து சட்டப்பேரவையில் கேட்டேன். அதற்கு பதில் முறையாக இல்லை. தேர்தல் அறிக்கையில் திமுக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது குழு அமைத்து மக்களிடம் கருத்து கேட்டு வருகிறது.  உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவித்ததால் தான் அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு நடத்தப்பட்டது.

திமுக தலைவரும், கட்சியின் முக்கிய தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் கூறினார்கள். ஆனால் தற்போது அது குறித்து பதில் இல்லை. திமுக தேர்தலில் தவறான வாக்குறுதி கொடுத்து கண்துடைப்பில் ஈடுபட்டு உள்ளது.

சசிகலா அதிமுகவில் இல்லை. இதனை பல முறை சொல்லியும் ஊடகத்தினர் பெரிதுபடுத்தி வருகின்றனர். சசிகலாவுக்கும் அதிமுகவிற்கும் எந்த சம்மந்தம் இல்லை. நாள்தோறும் நூறு பேரிடம் மட்டுமல்ல, ஆயிரம் பேரிடம் பேசினால் கூட கவலையில்லை. எங்களுக்கு ஒன்றறை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். 

மின்வெட்டு குறித்து உரிய பதில் அளிக்கவில்லை. மாறாக அணிலை காரணமாக கூறுவது வேடிக்கையானது. இதனை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று பழனிசாமி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.