அப்துல்கலாமின் மூத்த சகோதரர் மறைவு: தலைவர்கள் இரங்கல்
முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல்கலாம் அவர்களின் மூத்த சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயர் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 104.

அப்துல்கலாமின் மூத்த சகோதரர் மறைவு: தலைவர்கள் இரங்கல்

அப்துல்கலாமின் மூத்த சகோதரர் மறைவு: தலைவர்கள் இரங்கல்
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமின் மூத்த சகோதரா் ஏ.பி.ஜெ. முஹம்மது முத்துமீரா மரைக்காயா் (104) உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 7) இரவு காலமானாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த ஜெயுனல்லாவுதீன்- ஆஷியம்மா தம்பதிகளின் இரண்டாவது மகன் ஏ.பி.ஜெ. முஹம்மது முத்துமீரா மரைக்காயா். இவா் கடந்த 5.11.2020 அன்று தனது 104 ஆவது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடினாா். இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானாா். இதையடுத்து பள்ளிவாசல் தெருவில் உள்ள முகைதீன் ஆண்டவா் தொழுகை பள்ளிவாசலில் அவரது உடல் திங்கள்கிழமை காலை அடக்கம் செய்யப்படுகிறது.
அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தனது இரங்கல் குறிப்பில், “மேதகு முன்னாள் குடியரசுத்தலைவர் Dr.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் அன்புச்சகோதரர் திரு.மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், "முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் மூத்த சகோதரர் அப்துல் மீரான் மரைக்காயர் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கும் வேதனைக்கும் உள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என இரங்கல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...