3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

இந்தியாவில் ஒரே நாளில் 2,40,842 பேருக்கு தொற்று:  3,741 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,55,102 பேர் கரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :23 மே 2021, 4:51 am

DIN


புதுதில்லி:  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,55,102 பேர் கரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில், கரோனாவின் கோர தாண்டவத்துக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,40,842 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2.65 கோடி (2,65,30,132) ஆகவும் அதிகரித்துள்ளது. 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 28,05,399 பேராகவும் குறைந்துள்ளது. 

ஒரே நாளில் கரோனா தொற்றால் 3,741 போ் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,99,266-ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,34,25,467-ஆக உயா்ந்துள்ளது. ஒரே நாளில் 3,55,102 குணமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, மே 22 -ஆம் தேதி வரை 32,64,84,155 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. சனிக்கிழமை ஒரேநாளில் 21,23,782 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

நாடு முழுவதும் இதுவரை 19,50,04,184 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.