மும்பை, போபாலில் பெட்ரோல் விலை ரூ.100ஐத் தாண்டி விற்பனை
கரோனா ஊரடங்கு காலத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியது.


மும்பை: கரோனா ஊரடங்கு காலத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியது. மும்பை மற்றும் போபாலில் பெட்ரோல் விலை தொடர்ந்து ரூ.100க்கும் அதிகமாக விற்பனையானது.
மும்பையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.47 காசுகாளாகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.45 காசுகளாகவும் விற்பனையானது. மத்திய பிரதேசம் மற்றும் போபாலில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.34 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.93.37 ஆகவும் நிலவியது.
தலைநகர் தில்லியில் ஒரு சிறிய ஏற்றத்துடன் முறையே லிட்டருக்கு ரூ.94.23 மற்றும் ரூ.85.15 ஆக விற்பனையானது. இதுவே பெட்ரோல் லிட்டருக்கு 29 காசுகளாகவும் மற்றும் டீசல் 26 காசுகளாகவும் அதிகரித்துள்ளது.
கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ரூ.94.25 ஆகவும் டீசல் விலை ரூ.87.74 ஆகவும் விற்பனையானது. மதிப்பு சேர்க்கப்பட்ட வரியைப் பொறுத்து டீசல் மற்றும் பெட்ரோலின் விலை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...