வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் திருகார்த்திகை திருநாளின் தொடர்ச்சியாக சனிக்கிழமை அகல் விளக்குகளில் நெய் ஊற்றி லட்சதீபம் ஏற்றப்பட்டது.

News image

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் கருவறை செல்லும் பகுதியில் அகல்விளக்குகளால் ஏற்றப்பட்டிருந்த லட்ச தீபம்

Updated On :20 நவம்பர் 2021, 2:45 pm

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் திருகார்த்திகை திருநாளின் தொடர்ச்சியாக சனிக்கிழமை அகல் விளக்குகளில் நெய் ஊற்றி லட்சதீபம் ஏற்றப்பட்டது.

மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் 49ஆவது ஆண்டாக சென்னையை சேர்ந்த ராமச்சந்திர ஐயர் குழுவினரால் லட்சம் அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றப்பட்டது.

கோயில் கருவறை செல்லும் வழியில் உள்ள பகுதி முழுவதும் அகல் விளக்கு தீபங்களினால் ஜொலித்தது பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் பலரும் அகல்விளக்கு வரிசையை ஆர்வத்துடன் பார்த்து தற்புகைப்படமும் (செல்பி) எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக மூலவர் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், விசேஷ தீபாராதனைகளும் நடந்தன.

இதுகுறித்து லட்ச தீபம் ஏற்றிய சென்னையை சேர்ந்த ராமச்சந்திர ஐயர் கூறியதாவது,  “ஒருமுறை மகா பெரியவரை தரிசிக்க சென்றிருந்த போது அவர் திருவண்ணாமலை திருகார்த்திகை தீபத்துக்கு மறுநாள் காமாட்சி அம்மனுக்கு அபிஷேகமும், அகல் விளக்கில் நெய் ஊற்றி ஒரு லட்சம் தீபம் ஏற்றுமாறும் கூறி ஆசி வழங்கினார். அன்று முதல் இன்று வரை தொடர்ந்து 49 ஆண்டுகளாக திருகார்த்திகைக்கு மறுநாள் கோயிலில் லட்சதீபம் ஏற்றி வருகிறேன்.

தீபஒளியில் இருள் அகன்று ஞான ஒளி பரவி மக்கள் அனைவரும் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்பதற்காக இப்பணியை விட்டு விடாமல் தொடர்ந்து செய்யுமாறு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் கேட்டுக்கொண்டார்.

அதன்படி தொடர்ந்து ஆலயத்தில் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி லட்சதீபம் ஏற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.